சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
39
72. நன்றி


இந் நூல் இவ் வகையில் உருவாவதற்கு இருபதாண்டுகளுக்கு மேலான எனது பாரதி ஆராய்ச்சி உதவியுள்ளது. இந்த நெடுங் காலத்தில் பாரதி அடிச்சுவடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் எனக்கு உதவிபுரிந்த பாரதி பக்தர்கள் எண்ணற்ற பேர். அவர்களில் சிலரை எனக்கு முன்பின் தெரியாது. இந் நூல் பூர்த்தியடைந்துள்ள இத் தருணத்தில் அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி முதலில் உரியதாகும்
.

----

ஆசிரியர் 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், பத்திரிகைத் துறையில் எனது முதல் ஆசிரியர், பத்திரிகைத் துறைக்கு என்னைக் கொண்டு வந்தவர், அதேபோல பாரதித் துறையிலும் நான் ஈடுபடக் காரணமானவர், மேலும், 1954ல் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரென்ற முறையில் எனது பாரதி பொருட் காட்சிக்குப் பரிசுக் கௌரவம் அளித்து என் ஊக்கத்தை மேன்மேலும் வளர்த்துவிட்ட அவருக்கு எனது நன்றி.

"ஜெய பாரதி", "ஹிந்துஸ்தான்" பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவரும், முதிய எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்பவருமான ரா.நாராயணன் அவர்களுக்க பாரதியன்பர் விசேஷமாய்க் கடமைப்பட்டிருக்கிறார்கள். "ஹிந்துஸ்தான்" காரயியாலயச் செலவில் புதுவை சென்று 1938-லும், 1939-லும் நான் சேகரித்த படங்களும் விவரங்களும், "ஹிந்துஸ்தான்" 1938, 1939, 1941, 1941, 1942ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட 'பாரதி மலர்'களுமே வழக்கமான பாதையைவிட்டு பாரதி ஆராய்ச்சியில் புதுவழி வகுத்தன.

"ஹிந்துஸ்தான்" சார்பில் நானும் யூ.நரஸிடங்க ஷெனாய் என்ற புகைப்படக்காரரும் புதுச்சேரி போய் வருவதென்ற என் யோசனையை ஆர்வத்துடன் ஆதரித்து நடத்திவைத்த "ஸண்டே டைம்ஸ்", "ஹிந்துஸ்தான்" ஸ்தாபகரும் திரகரின் சிஷ்யருமான எம்.சுப்பராய காமத் அவர்கள், ஆசிரியர்கள் ரா.நநாராயணன், ஈ.ஆர்.கோவிந்தன் (தற்சமயம் "ப்ரி இந்தியா"வை நடத்திவருபவர்) ஆகியோருக்கு எனது நன்றியைச் செலுத்துகிறேன். 1938-39-ல் "ஹிந்துஸ்தான்" செய்ததற்குப் பிறகு சுமார் இருபதாண்டுகளாகியும் இன்னும் வேறு எந்தப் பத்திரிகையும் இன்னும் வேறு எந்தப் பத்திரிகையும் அதே முறையில் பாரதியின் அடிச்சுவடுகளைத் தேடத் திட்டமான முயற்சி எடுக்கவில்லை என்பதே "ஹிந்துஸ்தான்" ஆசிரியர்க்ள் எடுத்த காரியத்தின் தனிச் சிறப்பை விளக்கும்.

பாரதி அடிச்சுவடுகளைத் தேடும் பணியில், குவளைக் கண்ணன் என்ற குவளையூர் கிருஷ்ணமாச்சாரியாரும், புதுவை அம்மாக்கண்ணுவின் புதல்வர் வே.வேணுகோபால் நாயக்கரும், பரலி சு.நெல்லையப்பரும், வ.ரா.வும், 'பாரதிதாச'னும், பாரதியின் மனைவி செல்லம்மா பாரதி, புதல்வியர் தங்கம்மா பாரதி, சகுந்தலா பாரதி, இளைய சகோதரர் சி.விசுவநாதன், பந்து வி.ஹரிஹர சர்மா முதலியோரும், பாரதியின் நெடுங்கால நண்பர் மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் (ஸ்ரீ.ஸ்ரீ.ஆசார்ய) அவர்களும் அளித்துள்ள உதவி முக்கியமானது.

எட்டயபுரத்தில் பாரதியின் பள்ளித் தோழராகவும் பிற்காலத்தில் தொடர்ந்த நண்பராகவும் விளங்கிய ச.சோமசுந்தர பாரதி அவர்களும், பாரத சென்னைக்கு முதன் முதலாக வந்தது முதலே அவரை அறிந்திருந்த சா.துரைசாமி அய்யர், வி.சக்கரை முதலியோரும், புதுவையில் பாரதியுடன் பழகிய நண்பர்கள் பிரம்மராய அய்யர் என்ற புரொபஸர் என்.சுப்பிரமணிய அய்யர், அமிர்தா என்ற அமுதன், பொன்னு ராஜா பகதூர், டி.விஜய ராகவாச்சாரியார் முதலியோரும், மதுரையில் அவருடன் உழைத்த ப.ரா.அய்யாசாமி அய்யர், காசியில் அவரையறிந்த பண்டிட் எஸ்.நாராயணய்யங்கார் முதலியோரும் பாரதியைப் பற்றிப் பல அனுபவ விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். பாரதி சம்பந்தப்பட்ட பொருள்கள் சிலவற்றையும் அவர்கள் கொடுத்து உதவியிருக்கிறார்கள்.

பாரதியாரும் காந்தியடிகளும் சென்னையில் தம் இல்லத்தில் சந்தித்தது பற்றிய வருஷம் முதலான சில சந்தேகங்கள ஸ்ரீ.சக்கரவர்த்தி ராஜசூகாபாலாச்சாரியார் அவர்கள் நிவர்த்தித்தார்கள். அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

மேலும், கவிஞரின் செட்டி நாட்டு விஜயம் பற்றி கானாடுகாத்தான் பாரதி பக்தர் வை.சு.சண்முகன் அவர்களும் மகளிர் இல்லம் சொ.முருகப்பா அவர்களும் கடிதமூலம் தெரிவித்த தகவல்களும், கடயம் வாழ்க்கை பற்றி மதுரை தேசபக்தர் ரா.ஸ்ரீநிவாஸ வரதன் அளித்த சான்றுகளும் ஏற்கனவே தெயிவாக இராத பல விவரங்களைத் தெளிவாக்க உதவின.

சங்கு சுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா டாக்டர் வ.வே.ஸு. கிருஷ்ணமூர்த்தி (வ.வே.ஸு.அய்யரின் புதல்வர்), எம்.ஆர் வைத்தியநாத சர்மா (சுப்பிரமணிய சிவாவின் சகோதரர்), டாக்டர் எஸ்டி.நரசிம்மன் ('இந்தியா' ஸ்துபகவர் எஸ்.என் .திருமலாச்சாரியாரின் புதல்வர்), மே%ர் வி.எஸ்மகாதேவன் (புதுவை சாமிநாத தீக்ஷிதரின் புதல்வர்), 'மதுரமித்ரன்' ந.சுப்பிரமணியம் முதலியோர் பல படங்களையும் இதர சான்றுகளையும் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும், சுரேந்திரநாத் ஆர்யாவுன் படத்தை வாங்கிக் கொடுத்த பச்சையப்பன் ட்ரஸ்ட் நிர்வாகிகளுக்கும், சுரேந்திரநாத் ஆர்யாவின் கீழ் வேலை செய்துள்ளவரும் படத்தைக் கொடுத்துதவியவருமா ஆதிகேசவ பிள்ளைக்கும் எனது நன்றி.

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பாரதி நினைவுக் குறிப்பு நூலையும் புகைப்படத்தையும் தந்துதவிய வ.உ.சி.சுப்பிரமணியம் (வ.உ.சி.யின் புதல்வர்), எட்டயபுரப் படங்கள் தந்துதவிய ரா.சாம்பசிவய்யர், அமிர்தசாமி, "பகீரதன்", "கல்கி" அலுவலகம், ஸத்தியமூர்த்தி காலப் படங்களை உதவிய அவரது அருமைப் புதல்வி லக்ஷ்மி, பாரதிதாசன் படமுதவிய சோ.சாமிநாதன், அரவ்ந்தர் படங்களும் பத்திரிகையும் உதவிய அரவிந்தாசிரமம், மணக்குள விநாயகர் படமுதவிய ரா.கனகலிங்கம், சுதேசி பத்மநாபய்யங்கார் படமுதவிய அவரது புதல்வர் பி.பார்த்தஸாரதி, பாரதியை ஆதரித்த வள்ளல்கள் எம்.ராமசேஷ அய்யர், வை.சு.சண்முகம் படங்களை முறையே தந்த கணேஷ் கம்பெனி அதிபர் சுப்பையர், வை.சு.வின் பேரன் ராஜா சண்முகம் முதலியோருக்கும், ஸ்ரீ.ஸ்ரீ.ஆசார்யவின் தற்காலப் படம் உதவிய எம் ஓ.அழகிய சிங்கராச்சாரிக்கும், இன்னும் பற்பல பேர்களுக்கும் இச்சமயம் நன்றி செலுத்த வேண்டும்.

சுப்பிரமணிய சிவாவின் "ஞானபாநு" பத்திரிகை இதற்களின் புகைப் படங்களும், பாரதியின் பாடல் முதன்முதலில் வெளியான "விவேக பாநு" பத்திரிகைப் பக்கமும் என் பார்வைக்கு வருமாறு உதவிய மதுரை என்பரும் 'பரிதிமாற் கலைஞன்' வி.கோ.சுரிய நாராயண ஸாஸ்திரியின் பேரருமான வி.ஜி.சீனிவாஸனின் உற்சாகமான உதவியை நான் விசேஷமாய்க் குறிப்பிட வேண்டும்.

மேலும் பாரதி, வ.வே.ஸு.அய்யர், திரு.வி.க. மூவருடனும் நெருங்கிப் பழகியுள்ள் வெ.சாமிநாத சர்மா அவர்களும், பாரதி ஆராய்ச்சியாளர் பெ.தூரன் அ வர்களும், பாரதி நண்பர் கே.எஸ்.வெங்கட்ராமனும் இந்நூல தயாரிப்பதில் அளித்துள்ள உற்சாகத்துக்கும் இதர உதவிகளுக்கும் நன்றி செலுத்துகிறேன்.

பாரதியுடன் "இந்தியா" வில் இருந்த பழம் பத்திரிகையாளர் வேங்கட ஆரியா பத்திரமாய்ச் சேர்த்து வைத்திருந்த "இந்தியா" இதழ்கள் தொகுதி இந்நூல் அமைப்புக்பப் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. இந்தப் பிரதிகளே முதலில் "இந்தியா" காரியாலத்தி இருந்தன வென்றம், பாரதியே இவற்றை உபயோகித்திருக்கிறார் என்றும் மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் மூலம் அறியும்போது, இவைகளை இவ்வளவு ஒழுங்ககவும் பத்திரமாகவும் சேர்த்து வைத்திருந்த வேங்கட ஆர்யா அவர்களுக்கு நாம் பன்முறை னநற்றி செலுத்த வேண்டுமேன்று தோன்றுகிறது.

பாரதி காலத்து "சுதேசமித்திரன்" இதழ்களையும், "ஹிந்து" இதழ்களையும் பார்த்து அக் காலத்திய செய்திகளைப் பிரதியெடுத்து உபயோகித்துக கொள்ள "மித்திரன்" நிர்வாகிகளும் "ஹிந்து"நிர்வாகிகளும் அனுமதித்துள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி.

முடிவாக, 1936ல் நான் முதன் முதலாக அறிந்தது முதல் இன்றுவரை பற்பல யோசனைகளைத் தெரிலிவத்து பாரதிப் பணியில் எனக்கு ஊக்கமூட்டி வருபவரும், தமது தள்ளாத வயதிலும் அடிக்கடி கடித மெழுதி இன்று செய்வதற்கிருக்கும் கணிகளை நினைப்பூட்டி வருபவரும், "சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பதற்கொப்ப தமது குடும்பத்தில் பெரும் செல்வம் குன்றிய இந் நாளிலும் மங்காத இன்முறுவலுடன் பக்குவம் நிறைந்த வாழ்க்கைக்கு உதாரணமாக விளங்கி வருபவருமான 81 வயது இளைஞர் மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் (ஸ்ரீ.ஸ்ரீ.ஆசார்ய) அவர்கள் மனமுவந்து இந்நூலுக்கு அளித்துள்ள முதவுரைக்கு அப் பெரியவருக்கு உளம் கனிந்த நன்றி செலுத்துகிறேன்.

இப் பணியில் என் மனைவி மக்கள் புரிந்துள்ள பல்பல உதவிகளை நான் மறக்க இயலாது. அதேபோல, எனது பல குறைபாடுகளின் நடுவே இப் பெருநுலைசாதித்துக் கொடுத்த அழுத நிலைய ஊழியர்களுக்கும் நன்றி உரியது.

பாரதி பணியில் எனைப் பங்குகொள்ளச் செய்த இறைவனுக்கும் நன்றி செலுத்தி, இனி வரும் காலத்தில் இப் பணி பன்மடங்காய்ப் பெருகி உலகெங்கும் பாரதி எண்ணங்களும் தேமதுரத் தமிழோசையும் பவர வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

ரா.அ.ப.

 

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur